அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைவோம்

இனம், மதம், மாகாணம் மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து, அனைத்து மக்களும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதுடன், சாதி மற்றும் மத பேதங்களின்றி மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகள், கௌரவம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே தேசிய நல்லிணக்கத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜன் தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தில் இலங்கையராக தேவையான தலையீடுகளை மேற்கொள்வது முக்கியம் என வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment