கண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் கண்டி உப பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேக நபர் நேற்று (03) பிற்பகல் கினிக்தல்தெனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கினிக்தல்தெனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.
சந்தேக நபர், குறித்த பெண்ணை திருமணம் முடித்து பின்னர் சட்டப்பூர்வமாகப் விவாகரத்து பெற்றிருந்த நிலையிலேயே இச்செயலில் ஈடுபட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் கண்டி உப பிரிவு மேற்கொண்டு வருகிறது.
