இலங்கைக்கான புதிய சீனத் தூதராகப் பொறுப்பேற்றுள்ள வேய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலகளாவிய போக்குகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் சீனாவுடன் பகிர்ந்துகொண்ட ராஜதந்திர உறவுகள் மற்றும் அனுபவங்களை முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இதன் போது நினைவுகூர்ந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீடித்த நட்பும் ஒத்துழைப்பும் எதிர்காலத்திலும் தொடர்ந்து வலுவடையும் என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன நம்பிக்கை வெளியிட்டார்.



