கடவத்தை வேபட பகுதியில் 8 துப்பாக்கிகள், பெருமளவிலான வெடிமருந்துகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், படுகொலை செய்யப்பட்ட டான் பிரியசாத் என்பவரின் சகோதரர் படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதும், அவரது தந்தை டான் பிரியசாத் படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடவத்த - வேபட பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின், பல்வேறு வகையான 534 தோட்டாக்கள உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 8 துப்பாக்கிகள் மற்றும் இரண்டு கைவிலங்குகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குற்றவாளி ஒருவரின் வழிகாட்டலின் பேரில் இவற்றை தம்வசம் வைத்திருந்ததாகவும், அவரது ஆலோசனையின் பேரில் பல்வேறு நபர்களுக்கு இவற்றை விநியோகித்து வந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றவாளியின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் பிரதான நபராக இந்த சந்தேகநபர் தொழிற்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
