பாதுகாப்பு தீவிரம் - மயான அமைதியில் கொழும்பு - அனைவரும் எதிர்பார்த்த தீர்ப்பு இன்று

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படுவதை முன்னிட்டு, அலுத்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உதவி மற்றும் அனுசரணை வழங்கியமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பே இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இன்று காலை அலுத்கடை மேல்நீதிமன்றில், நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால்உஇத்தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

நவ்பர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் 2,309 சாட்சியாளர்கள் சாட்சியமளித்திருந்தனர்.

கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதியுடன் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment