பலாங்கொடை உடகந்தை பகுதியில் அமைந்துள்ள வீர விநாயகர் ஆலயம் சில மதவெறியர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று மலை 6.30 அளவில் பதிவானதாக தமிழ் பிளஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியொன்றில் வருகை தந்த ஒருவரால் இவ்வாறு சிலை உடைப்பு மற்றும் சமூக விரோத செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலய அறங்காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறியவர்களே இவ்வாறு நடந்துக்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
