100 ரூபாய்க்காக 10 இலட்சம் ரூபாவை இழந்த முதலாளி

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: எல்ல உணவகத்திற்கு 10 இலட்சம் ரூபா அபராதம்அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்த, எல்ல பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபா (1 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.   

ரூபா 100/- எனக் குறிப்பிடப்பட்டிருந்த குடிநீர் போத்தல் ஒன்றை ரூபா 200/-க்கு விற்பனை செய்தமை தொடர்பிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பான வழக்கு 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தினால் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.   

இவ்வாறான அநீதிகள் அல்லது முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுஞ்செய்தி/அழைப்பு இலக்கம் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment