தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலச்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று பிற்பகல் 4 மணி முதல் இன்று பிற்பகல் 4 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை (Level 3) தொடர்ந்து அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை நிலை 3: வெளியேறவும் (Red Alert)
கண்டி மாவட்டம்: பச்பாகே கோரலே, உடபலாத்த, கங்க இஹள கோரலே, தொளுவ
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு
எச்சரிக்கை நிலை 2: அவதானத்துடன் இருக்கவும் (Amber)
காலி மாவட்டம்: தவலம, நாகொட, நெளுவ, நியாகம
கண்டி மாவட்டம்: தெல்தோட்டை, பன்வில, யட்டிநுவர, கங்கவட்ட கோரலே, உடுநுவர
கேகாலை மாவட்டம்: தெரணியகல, யட்டியாந்தோட்டை, மாவத்தலை, தெஹியோவிற்ற, அரநாயக
நுவரெலியா மாவட்டம்: தலவாக்கலை
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, பெல்மடுல்ல
எச்சரிக்கை நிலை 1: விழிப்புடன் இருக்கவும் (Yellow)
கொழும்பு மாவட்டம்: சீதாவக்க, பாதுக்க
காலி மாவட்டம்: கரந்தெனிய, எல்பிட்டிய, பலபிட்டிய / பத்தேகம
களுத்துறை மாவட்டம்: வலல்லாவிற்ற
கேகாலை மாவட்டம்: வரகாப்பொல, கேகாலை, காலிகமுவ, புலத்கோபிட்டிய, ருவன்வெல்ல
கண்டி மாவட்டம்: பாதஹேவாஹெட்ட, உடுதும்பர, மெததும்பர, குண்டசாலை, பாததும்பர, தும்பனே, பூஜாப்பிட்டிய, அக்குரணை, ஹதரலியத்த, ஹாரிஸ்பத்துவ
மாத்தறை மாவட்டம்: கொடபொல, பிட்டபெத்தர, பசுగొட
இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, எலபாத்த, அயகம, நிவித்திகலை, குருவிட்டை
நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா
