பணம் என்றால் பிணத்தையும் விட்டு வைக்காத மனிதர்கள் - மன்னாரில் நம்பமுடியாத சம்பவம்
மன்னாரிலிருந்து முல்லைத்தீவிற்கு சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பெறுமதியான நகை மற்றும் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்தது சாரதி ஒருவர் மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார்.
இந்த மனித நேய நிகழ்வை அடுத்து குறித்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து கௌரவிக்கப் பட்டுள்ளனர்.
மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நேற்று புதன்கிழமை (16) காலை 5.30 மணியளவில் முல்லைத்தீவிற்கு குறித்த தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுள்ளது.
இதன் போது குறித்த பேருந்தின் சாரதியாக முருகையா மகேஸ்வரன் மற்றும் நடத்துனராக டெனிஸ் ஆகியோர் கடமையாற்றியுள்ளளனர்.
இதன் போது குறித்த பேருந்தில் தர்மபுரம் பகுதியில் வைத்து பெண் ஒருவர் ஏறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் அவரின் பணப் பையை தவற விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பேருந்தில் பணப்பையை அவதானித்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அதை மீட்டு சோதனை செய்த போது குறித்த பணப்பையில் தேசிய அடையாள அட்டை, தங்க செயின் மற்றும் ஒரு தொகை பணம் ஆகியவை காணப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட சாரதி மற்றும் நடத்துனர் குறித்த பணப்பையை உடனடியாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தில் அதன் தலைவர் ரி.ரமேஷ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் உடனடியாக குறித்த பணப்பையின் உரிமையாளரான குறித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.