சற்று முன்ன நீதிமன்றில் வந்து நின்றார் நாமல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்று முன்னர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய எயர் பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் வாக்குமூலம் அளித்த நாமல் ராஜபக்ஷவை, கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment