அனோஜனனின் தொலைபேசி செயலிழந்தது - அதிர்ச்சியில் மக்கள்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனோஜனின் சகோதரர் ஹம்சிதன் சிவராசா கருத்து வெளியிடுகையில், கடந்த வாரம் தொடக்கம் எங்களால் அனோஜனைத் தொடர்பு கொள்ள முடியாதுள்ளது.

கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான உரையாடலின் போதே நாங்கள் கடைசியாக அனோஜனின் குரலைக் கேட்டோம். அதன் பின் தொடர்பு கொள்ள முடியவில்லை.

கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் இருந்து அனோஜன் தொடர்பில் கிடைக்கும் தகவல்கள் தவிர, தற்போதைக்கு எங்களுக்கு வேறு எந்தத் தகவல்களும் தெரியவருவதில்லை.

அதன் காரணமாக நாங்கள் பெரும் கவலையுடன் இருக்கின்றோம். எங்கள் சகோதரனின் விடுதலைக்காக சகல சமூகங்களைச் சார்ந்தவர்களும் வெளிக்காட்டும் நேசம், ஒத்துழைப்பு குறித்து நாங்கள் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த விடயத்தில் முஸ்லிம்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

சகோதரனின் விடுதலைக்காகவும் அவருடன் தொடர்பு கொள்ள கூடிய வழிமுறைகள் காணப்பட்டால் உதவுமாறும் குடும்பத்தினர் கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment