யாழ்ப்பாணம் - சங்குப்பிடி பாலத்திற்கு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி காவல் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரை சேர்ந்த ஆர்னோல்ட் அன்ரனி (வயது 31) என்ற காவல்துறை உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் பயணித்த போது, , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது..
உயிரிழந்த காவல்துறை உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
