அனோஜனை காப்பாற்ற வேண்டும்!” – இந்து–முஸ்லிம் தலைவர்கள் அவசர பேச்சு


 சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள தமிழ் இளைஞர் அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுத்து, அவரது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மதத் தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் இந்த அவசர சந்திப்பு நடைபெற்றது.

இந்து குருமார்கள் மற்றும் மதத் தலைவர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு, அனோஜனை மரண தண்டனையிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தது.

இதன்போது, சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அனோஜனின் உயிரைக் காப்பாற்ற சாத்தியமான அனைத்து வழிகளிலும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஜம்மியத்துல் உலமா சபை உறுதியளித்துள்ளது.

மனிதநேய அடிப்படையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு இந்து அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment