மகளை அழைத்துச் சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம், அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற கொடூர விபத்து ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலையிலிருந்து மகளை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த கொடூர விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த பாடசாலை மாணவியான அவரது மகள் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment