பண்டாரவளைக்கு ஐஸ் விற்பனை செய்த நபர்!




பண்டாரவளை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் பண்டாரவளை வலய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மடுல்சீமை  பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கொழும்பிலிருந்து கொண்டுவரப்படும் ஐஸ் போதைப்பொருளை இவ்வாறு பண்டாரவளை நகரில் விற்பனை செய்துவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (27) பண்டாரவளை  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பண்டாரவளை வலய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment