டுபாயில் மறைந்திருந்த மற்றுமொரு சண்டியன் கைது

 

டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கொண்ட ரஞ்சி எனப்படும் ரஞ்சித் குமார, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கொண்ட ரஞ்சி, துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை பாதாள உலக நபர்களில் ஒருவர் ஆவார்.

அவர் பல குற்றச் செயல்களில் தொடர்புபட்டிருப்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment