ஒழுங்கமைக்கப்பட்ட பிரபல குற்றவாளியின் பிறந்த தின விழாவில் முன்னாள் கிரிக்கற் வீரர்

 ஒழுங்கமைப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படுபவரும் வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ளவருமான மத்துகம ஷான் என்பவரின் 40ஆவது பிறந்த தின நிகழ்வில் முன்னாள் கிரிக்கட் வீரர் ஒருவர் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிங்கள நாளிதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சுமார் 1000 பேரை எதிர்பார்த்துக் குறித்த பிறந்தநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாகவும், களுத்துறை மாவட்டத்தின் ஊடாக அரசியலில் பிரவேசிக்க முயற்சித்த கிரிக்கெட் வீரரே இந்த நிகழ்வில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிறந்தநாள் நிகழ்வில் பல்வேறு வர்த்தகர்களும் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அங்கு அமர்ந்திருந்த அனைத்து வர்த்தக பிரபலங்களுடனும் அரசியல் இலாப நோக்கத்துடன் அருகில் சென்று கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment