பலாங்கொடை லங்கா பரண தோட்டத்தில் கசிப்பு உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பலி சார் தெரிவித்தனர்
பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் போலீசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
