மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக வந்த மின்சார சபை ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சிலாபம் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர் சிலாபம், ஆனந்த மாவத்தையில் வசிக்கும் மின்சார சபை ஊழியராவார்.
மின் இணைப்பைத் துண்டிக்கும் பிரதிநிதியாகச் பணியாற்றும் அவர், தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.png)