22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யும் ஆர்ப்பாட்டம் ஒன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (24) கொழும்பில் நடைபெறவுள்ளது.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 'நீதிமன்றத்தின் மீது கைவைக்காதே' என்ற தொனிப்பொருளில் பொல்துவ சந்தியில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
ஜனநாயகத்தை மதிக்கும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமகி தருண பலவேகய (இளைஞர் பிரிவு), சமகி காந்தா பலவேகய (மகளிர் பிரிவு), அரச சேவை சமகி தொழிற்சங்க சம்மேளனம் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் இணையவுள்ளனர்.
