இன்று முதல் எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சூரியனின் தெற்கு நோக்கிய தோற்றப்பாதை காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேர் மேலாகத் தென்படும்.
அதன்படி, இன்று (03) நண்பகல் 12.09 மணியளவில் மாதம்பே, தொரயாய, தொட்டகமுவ, ரத்தோட்டை மற்றும் கலவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
