கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில் இருந்து, முதலைகளால் தாக்கப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கரடியானா குப்பை அகற்றும் நிலையத்தின் ஊழியர்கள், ஆற்றில் மனித சடலம் ஒன்று கிடப்பதையும், அதனை முதலை ஒன்று இழுத்துச் செல்வதையும் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தை முதலை ஒன்று உண்ணும் நிலையில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பின்னர், அப்பகுதி மக்களின் உதவியுடன் சடலத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலை சடலத்தைப் பிடித்திருந்ததால் மீட்புப் பணிகள் தடைப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சடலத்தை பாதுகாப்பாக மீட்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)