கவர்ச்சியில் மயங்கி பணத்தை இழந்த பல இளைஞர்கள்
பட்டுவத்தை (Batuwatta) பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், இணையவழி நிதி மோசடி தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெலிகிராம் (Telegram) குழுவொன்றின் ஊடாக "ஆன்லைன் வணிகம்" மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி நபர்களை ஈர்த்து, இந்த மோசடியை அவர் முன்னெடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களால் வைப்பு செய்யப்பட்ட மொத்தம் ரூ. 542,877 தொகையில், ரூ. 66,999 மோசடி செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று காலை (18) கைது செய்யப்பட்டார்.
2024 பெப்ரவரி 10 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCID) வடமேற்கு மாகாணப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
