தாயைக் காப்பாற்ற அண்ணாவை போட்டு தள்ளிய தம்பி

அங்குருவாதொட, பெதிகமுவ கந்த பகுதியில் இன்று (19) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹல்தொட பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று (18) இரவும் உயிரிழந்த நபர் தனது தாயாரைத் தாக்கிய வேளையில், தாயாரைக் காப்பாற்றும் நோக்கில் 35 வயதுடைய அவரது இளைய சகோதரன் கத்தியால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் தாக்குதலுக்கு இலக்கான தாயாரும் காயமடைந்து தற்போது ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் உயிரிழந்த நபர் தனது தந்தையைத் தாக்கி காயப்படுத்தியிருந்ததாகவும், தந்தையும் ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய சந்தேகநபரான சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அங்குருவாதொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment