பல நாடுகளை ஏமாற்றிவயவர் இலங்கையிடம் சிக்கினார்

 



சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் எனப்படும் "ஐஸ்" போதைப்பொருள் தொகுதியை இலங்கைக்குக் கொண்டு வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை பயணி ஒருவர் நேற்று இரவு விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இரத்மலானை, ஜெயமாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

ஓமானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகுதியைப் பெற்றுக்கொண்ட இவர், கட்டாரின் தோஹா நகரை வந்தடைந்து, அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-654 என்ற விமானம் மூலம் நேற்று இரவு 07.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, 03 கிலோகிராம் 994 கிராம் எடையுடைய இந்த "ஐஸ்" போதைப்பொருள், 10 பார்சல்களாகத் தயாரிக்கப்பட்டு, அவர் கொண்டு வந்த பயணப்பையில் இருந்த பிஸ்கட் மற்றும் சாக்லேட் பெட்டிகளுக்குள் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த பயணி விமான நிலையத்திற்குள் வைத்து அடையாளம் காணப்பட்டு இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக்க தர்மசேனவின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் எச்.எம்.சி.பி.ஹேரத்தின் மேற்பார்வையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சந்தேகநபர்  மீகமுவ (நீர்கொழும்பு) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

Post a Comment