திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக நீர்கொழும்பு வரையான மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (55-65) கி.மீ வரையான பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் அக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நீர்கொழும்பிலிருந்து பேருவளை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-55) கி.மீ வரையான பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலையின் உயரமானது சுமார் (2.0 – 2.5) மீட்டர் வரை உயரக்கூடும்.
குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
