நம்பிக்கையை இழந்து தவிக்கும் எதிர்கட்சி..!




ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் தொடர்பில் 40க்கும் மேற்பட்ட விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Post a Comment