போதைப்பொருள் வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை மீண்டும் அக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
