நேபாளத்தில் அவர்களது சம்பிரதாயப்படி 13 ஆம் நாள் துக்க தினமாக நேபாள நாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது இதன்போது இலங்கையில் நேபாள தூதரக அதிகாரி விஜயகுமார் ரவுட் அவர்களது தலைமையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது இதன் போது பௌத்த இந்து இஸ்லாம் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் சார்பாக கலஹம தர்மரன்சி தேரர், மயூரவதி ராஜு குருக்கள் , கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா ,ஹசன் மௌலானா அருட் தந்தை நிஷான் சம்பத் குரே ஆகியோர் சகாயராஜா அன்டனி பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அத்துடன் பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
சிறப்பு உரையினை தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களை நினைத்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையில் ஈடுபட்டு வேண்டிக் கொண்டனர்.







