அவிசாவளை, கிரிந்திவெல பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரின் மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி இக்குற்றம் இழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.
விசாரணையாளர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், குற்றத்தைச் செய்ய சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த உயிரிழந்தவரின் மனைவியான சந்தேக நபர், நேற்று (07) பிற்பகல் கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டியவைச் சேர்ந்த 49 வயதுடையவரே இந்தச் சந்தேக நபராவார்.
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
