தடைபட்ட விமான போக்குவரத்துகள்-தவிக்கும் பயணிகள்-400 க்கும் மேற்பட்டோரை பலி எடுத்தும் அடங்காத தாகம்

இந்தோனேசியாவில் அனக் கிரகாத்தோவா எரிமலை வெடித்ததை அடுத்து ஏற்பட்ட விமானப் போக்குவரத்துத் தடைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியா முழுவதும் 340,000-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்துள்ளனர்.

சுமார் 3,000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹத்தா மற்றும் ஹலிம் பெர்தானகுசுமா ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ஜகார்த்தாவுக்கும்  மாகாணத்திற்கும் இடைப்பட்ட சுந்தா நீரிணையில் அமைந்துள்ள அனக் கிரகாத்தோவா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெடிக்கத் தொடங்கியதுடன், தொடர்ந்து எரிமலை சாம்பலை கக்கி வருகிறது. 

மேலும் அடுத்தடுத்த கால கட்டங்களில் எரிமலை மேலும் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக புவியியல் அமைப்பு எச்சரித்துள்ளது.

தீவிர எரிமலை நடவடிக்கை காரணமாக, செயலில் உள்ள எரிமலையின் 3 கிலோமீட்டர் சுற்றளவில் எவரும் நுழையவோ அல்லது எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சுந்தா நீரிணையில் செல்லும் கப்பல்களும் இந்த விலக்கு மண்டலத்திற்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளன. 

எனினும், இந்த எரிமலை வெடிப்புடன் தொடர்புடைய ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை எதுவும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கிரகாத்தோவாவின் குழந்தை என்று பொருள்படும் அனக் கிரகாத்தோவா, 1883 ஆம் ஆண்டு மவுண்ட் கிரகாத்தோவா வெடித்தபோது உருவான எரிமலை வாய்க்காலில் இருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கடலிலிருந்து வெளிவந்தது. 

கடந்த 2018 டிசம்பரில் இந்த எரிமலை சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சுனாமியில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment