விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களை தூக்கி குப்பையில் வீசிய தவிசாளர்

காரைதீவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உகந்ததற்ற பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபை எல்லைக்குள் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, அது தொடர்பில் உடனடி கவனம் செலுத்திய தவிசாளர் எஸ். பாஸ்கரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடவடிக்கை மேற்கொண்டார்.


இதனடிப்படையில், மனிதப் பாவனைக்கு உகந்ததற்ற நிலையில் காணப்பட்ட பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளைக் கொண்டு அவற்றை உடனடியாக அகற்றும் நடவடிக்கை காரைதீவு பிரதேச சபையினால் இடம்பெற்றது.

பொதுமக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு, மனிதப் பாவனைக்கு உகந்ததற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Post a Comment