சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் பெற்றோரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நேரில் சந்தித்தார்.
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசரிடம் இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலக் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
சட்ட மற்றும் இராஜதந்திர மட்டத்திலான தலையீடுகள் மூலம் அவரை மீட்க அரசாங்கம் தீவிர முயற்சிப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
