ஏர்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 இந்தியாவில் 'கிரீஷ்' (Krrish) நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் அவரை 4-வது சந்தேகநபராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பெயரிட்டுள்ளதுடன், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

எனினும், கிரீஷ் நிறுவன வழக்கு தொடர்பான விசாரணைகள் நிலுவையில் உள்ளதாலும், அதில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாலும் அவர் தொடர்ந்து சிறைக்காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார். 

அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் நீதிமன்றப் பகுதியில் திரண்டிருந்தனர்.

Post a Comment