ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றுள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) உரையாற்றவுள்ளார்.
நியூயார்க் நகரை நோக்கி முன்தினம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர், பொதுச்சபைக் கூட்டத்தொடரில் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு மற்றும் வெளிநாட்டுப் கொள்கைகளின் முன்னுரிமைகள் குறித்துக் கருத்துக்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
