இன்று நடைபெறாது...!




2024/2025 கல்வியாண்டிற்கான தேசிய மஹபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, பிரதமரின் தலைமையில் இன்று (28) நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இந்நிகழ்வு நடைபெறும் அடுத்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்காதிருக்க  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று கலிகமுவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment