மத்திய வங்கி பிணை முறி வழக்கு ஒத்திவைப்பு

 

மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரிப்பதற்காக முன்னர் நியமிக்கப்பட்டிருந்த நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முழுமையடையாத காரணத்தினால், குறித்த நீதிபதிகள் குழாம் மீள நியமிக்கப்படும் வரை வழக்கை இவ்வாறு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதியன்று இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு 3,698 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 32 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பத்தினிகே சமரவீர மற்றும் அர்ஜுன் அலேசியஸ் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment