விஜயின் மகன் மேற்கொண்ட தீர்மானம்

‘சிக்மா’ படத்தின் promotion interviews-லேயே, “நீங்கள் தொடர்ந்து நடிக்கப் போகிறீர்களா?” என்று சஞ்சயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்குமே, “இல்லை, எனக்கு direction தான் முக்கியம்” என்று அவர் எங்குமே சொல்லவில்லை. எது எப்படி இருந்தாலும், “சிக்மா release-க்கு பிறகுதான் முடிவு” என்றுதான் அவர் சொல்லி முடித்தார். இதற்கு முன்பும் நடிப்பதற்காக அவரை பலரும் கேட்டிருக்கிறார்கள். SAC, Vikranth, ஏன் Vijay உட்பட பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறோம். 2023-லேயே Vijay Sethupathi, Dulquer Salmaan போன்ற நடிகர்களிடம் கதைகள் சொல்லி, எதுவும் set ஆகாத நிலையில்தான் Sandeep-உடன் ‘சிக்மா’வை commit செய்தார். அதனால் ‘சிக்மா’ எப்படி இருக்கும் என்பதை trailer-ஐ பார்த்தே பலரும் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். அதைத் தாண்டி படம் வெற்றி பெற்றால், நிச்சயம் சந்தோஷம்தான். அதனால் இந்த “direction தான் முக்கியம்” என்ற விஷயமெல்லாம் சும்மா உள்ளாலைக்கு என்று தான் நினைக்கிறேன். கண்டிப்பாக அடுத்த வருடமே Sanjay கதாநாயகனாக மாறிவிடுவார். அதற்கான எல்லா தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. அவர் செய்ய வேண்டியது நல்ல கதைகளைத் தேர்வு செய்வதற்கு ஒரு proper guidance-ஐ மட்டும் பெற்றுக்கொள்வதுதான். பார்ப்போம்… தமிழ் சினிமா சஞ்சயை எப்படி வரவேற்கப் போகிறது என்று!

Post a Comment