உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3ஆவது மணல் திட்டைப் பார்வையிடுவதற்கான வெள்ளோட்ட நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், வடமாகாண ஆளுநர் என். வேதநாயகன் உள்ளிட்ட அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பொலிஸார் கலந்துகொண்டனர்.
இதன்படி, வடமாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விசேட படகுகள் மூலம் கட்டணம் செலுத்தி 3ஆவது மணல் திட்டைப் பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் தலைமன்னாரில் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் மீனவர்களின் வருமானத்தை அதிகரிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் அதிகாரப்பூர்வமாக மணல் திட்டைப் பார்வையிடும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)