திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்-ஓடிச்சென்ற மனைவி பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 

ஹம்பாந்தோட்டையில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் ஹம்பாந்தோட்டையில் தனது காணியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பந்தகிரிய பகுதியைச் சேர்ந்த 43 வது வயதுடைய சுசாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் நண்பர்கள் குழுவுடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். அங்கு தனது மகள்களுடன் தகராறில் ஈடுபட்டு மூத்த மகளை தாக்கியுள்ளார்.

மகளை தாக்கியதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டு மனைவி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அவர், வீட்டிலிருந்து வெளியேறி தனது காணிக்குச் சென்று உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுயமான துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவரை உடனடியாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment