பொலிஸ் கட்டளையை மீறி தப்பிய கார்

பன்னல சந்திப்பு பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பறந்த வாகனத்தை நிறுத்துவதற்காக, கிரியுல்ல பொலிஸார் இன்று (22) காலை சுமார் 8.30 மணியளவில் ஒரு சிறப்பு அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.

​பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தின் டயர்களை நோக்கிச் சுட்டு, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஓட்டுநர் உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Post a Comment