தரம் குறைந்த இம்யூனோகுளோபின் மருந்துகளை அரச மருத்துவமனைகளுக்கு விநியோகித்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்களின் கீழ், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம (டுயமஅini புசைihயபயஅய) விற்கு கொழும்பு விசேட முவர் அடங்கிய மேல்நீதிமன் நீதிபதிகள் குழாம் கடும் எச்சரிக்கை விடுத்தது.
பிரதமரின் மேலதிக செயலாளர் ஒருவர் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில், பிரதி சொலிசிட்டர் ஜெனரலின்; நெறிப்படுத்தலின் கீழ் சாட்சி விசாரணை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, 8ஆவது பிரதி;வாதியான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நயந்த ஜெயசுந்தரவினால் குறுக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டாம் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கைநீட்டி சாட்சியமளிப்பவருக்கு பணித்தார்.
அதற்கமைய சாட்சியும் அதற்கு பதிலளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
இதற்கு சட்டத்தரணி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். '12 பேர் நாளாந்தம் நீதிமன்றத்திற்கு வருகின்றனர். அவர்கள் வீட்டிற்குச் செல்வதா அல்லது சிறை செல்வதா என்பது குறித்து நியாயமான வழக்கு விசாரணையொன்றின் ஊடாக அறிந்துகொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு.
'பதிலளிக்க வேண்டாம்' என்று கூறுவது நியாயமானதல்ல. எமக்குத் தேவையான கேள்விகளை கேட்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இவ்வாறு சாட்சிகளுக்கு தாக்கம் செலுத்துவது தவறு' என சட்டத்தரணி வாதிட்டார்.
இதன்போது விடயங்களை அவதானித்த பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட முப்பீட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம், பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.
'சாட்சிகளைக் கொண்டுவந்தது உண்மைதான்; ஆனால் அவர்கள் நீதிமன்றத்தின் சாட்சிகள். அவர்களை அடக்கவோ அல்லது அவர்களுக்கு தாக்கம் செலுத்தவோ உங்களால் முடியாது. இவை அனைத்தையும் நீதிமன்றம் கவனித்துக் கொண்டிருக்கிறது' என்று நீதிபதி பிரியந்த லியனகே தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், தாம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்காகவே ஆஜராகுவதாகக் குறிப்பிட்டார்.
தரம் குறைந்த மனித இம்யூனோகுளோபின் மற்றும் ரிட்டுக்ஸிமேப் (சுவைரஒiஅயடி) ஆகிய மருந்துகளுக்குப் பதிலாக வேறு திரவங்கள் அடங்கிய 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருள் விநியோகப் பிரிவுக்கு வழங்கி, இலங்கை அரசாங்கத்தின் 1,444 இலட்சம் ரூபா பணத்தை மோசடியாக வசப்படுத்தியமை மற்றும் குற்றவியல் ரீதியில் முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.