மொறட்டுவை – சொய்சா புற வீடமைப்புத் தொகுதியின் 'சி' (C) கட்டடத்தில் புதன்கிழமை (23) இரவு திடீரென ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ பரவலில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர், இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், முதற்கட்ட விசாரணைகளின்படி எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
