எச்சரிக்கை நீடிப்பு




நில்வலா மற்றும் கிங் கங்கையை அண்டிய பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலவும் மழைக்கால வானிலை காரணமாக கடந்த 24 ஆம் திகதி இந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அதனை மேலும் நீடிக்கவும் அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ள அத்திணைக்களம், இது குறித்து அவதானம் செலுத்தி, அப்பகுதிகளைச் சார்ந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment