இலங்கையின் செயற்கை நுண்ணறிவுத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் SLT-MOBITEL நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘Sri Lanka AI Week 2026’ மாநாடு கொழும்பில் கோலாகலமாகத் தொடங்கியது.
‘AI Amplified’ என்ற தொனிப்பொருளில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்த வாரத்தில், Monarch Imperial வளாகத்தில் 16 நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சர்வதேச நிபுணர்கள் பங்கேற்கும் AI Conference நடைபெறுகிறது.
அத்துடன், 35-க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ‘AI Expo’ கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30-ஆம் திகதி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்காக இந்த AI Expo திறக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் நவீன AI தொழில்நுட்பங்களை நேரடியாகப் பார்வையிட அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நாட்டின் எதிர்காலத்தை AI தொழில்நுட்பத்தின் மூலம் மறுவடிவமைப்பதே இந்த தேசிய முயற்சியின் முதன்மை நோக்கமாகும்.
