யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 9 இலட்சம் ரூபாய் பணத்துடன் பயணித்த பெண் ஒருவர் உட்பட 9 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், குறித்த குழுவினரை மறித்து சோதனையிட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தெக நபர்கள் பயணித்த இரண்டு உந்துருளிகள் மற்றும் மகிழூர்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
காரை சோதனையிட்ட போது, அதில் இருந்து பல கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 900,000 ரூபாய் ரொக்கப் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து 9 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
