பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் (Polonnaruwa Nephrology Hospital) ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் (Gas cylinder) வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிறுநீரக மருத்துவமனையின் ஊழியர்கள் என்பதோடு, அவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிவிபத்தினால் மருத்துவமனை கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

