நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்று (27) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 26,606 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது 463 சந்தேகநபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவர்களில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 12 நபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 360 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 165 நபர்களும் அடங்குவர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 324 சாரதிகளும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 119 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
.jpeg)