கடலில் கவிழ்ந்த இந்தோனேசிய படகு! 25 பேர் பத்திரமாக மீட்பு


இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேசியப் பிரஜைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

KM ‘GARUDA JAYA VI’ என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகு கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி கடலில் கவிழ்ந்ததில், அதில் இருந்தவர்கள் ஆபத்தில் சிக்கினர்.

இதன்போது, அருகில் பயணித்த MV MOONSTONE கப்பல் 25 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

இதையடுத்து, கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், அவர்களை கரைக்கு அழைத்து வர கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்காக இரண்டு கடற்படைப் படகுகள் அனுப்பப்பட்டு, மீட்கப்பட்ட 25 இந்தோனேசியர்களும் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   


Post a Comment