படகில் பயங்கர தீ விபத்து

இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே புதன்கிழமை (ஆகஸ்ட் 12) பயணியர் படகு ஒன்று திடீரென தீப்பற்றியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். 


படகில் இருந்த 170-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மீட்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.


 இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களில் நடக்கும் இரண்டாவது படகு தீவிபத்து சம்பவம் இதுவாகும்.


பாலியிலிருந்து லம்போக் (Lombok) தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் படகில் தீப்பிடித்ததை அடுத்து, இந்தோனேஷிய கடற்படை கப்பல் மற்றும் பிற படகுகள் விரைந்து சென்று 2 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 172 பேரை மீட்புப் படையினர் மீட்டனர்.


இந்த விபத்தில் 19 வயதான இந்தோனேஷிய யுவதி ஒருவர் உயிரிழந்ததாக லம்போக் தீவின் தேடல் மற்றும் மீட்புப் படை அதிகாரி முகமது ஹரியாடி (Muhamad Hariyadi) தெரிவித்துள்ளார்.

Post a Comment